அரசியலுக்கு வரும் நோக்கில் செயல்படும் விஜய்

அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் விஜய் செயல்பட்டு வருகிறார் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்திருக்கிறார்.

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் நடந்த லியோ படத்தின் வெற்றி விழாவின் போது நடிகர் விஜய் தனது அரசியல் பயணம் குறித்து சூசகமாகப் பேசியது அரசியல் வட்டாரத்தில் விவாத பொருளாகியுள்ளது என்றே சொல்லலாம்.  அதனை உறுதி செய்யும் வகையில் விஜய் ரசிகர் மன்றம் சார்பாகப் பல சமூக நற்பணிகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், சென்னை மெரினா கலங்கரை விளக்கம் அருகே தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடந்த தூய்மை பணியைத் தொடங்கி வைத்த இயக்குநர் வெற்றிமாறன் செய்தியாளர்களிடம் பேசினார். அதில், “விஜய் மட்டுமல்லாமல் அனைவரும் அரசியலுக்கு வரலாம். விஜய் அரசியலுக்கு வர வேண்டும் என்ற நோக்கத்தில்தான் செயல்பட்டு வருகிறார். எனினும், கள ஆய்வுகளை மேற்கொண்ட பிறகே அரசியலில் வரவேண்டும் என்று கூறியுள்ளார்.