கோவை-சிறுவாணி செல்லும் சாலையில் அமைந்துள்ளது இத்திருக்கோவில்!

கோவை மாவட்டம் செம்மேட்டில் அமைந்துள்ள அருள்மிகு முத்துவாளி உடனமர் நாகேசுவரசுவாமி திருக்கோவில் ராகு கேதுவால் ஏற்படும் தோஷங்களை நீக்குவதற்கு சிறந்த பரிகாரத் தலமாக உள்ளது.

தல வரலாறு:

சோழர்களால் திருப்பணி செய்யப்பட்ட இத்திருக்கோவில் 1500 ஆண்டுகள் பழமையானது. வாணிபம் செய்வதற்காக வந்திருந்த பாண்டியர்களும் இக்கோவில் திருப்பணியில் ஈடுபட்டுள்ளனர். அதற்கு சான்றாக கோவில் கல்வெட்டுகளில் மீன் சின்னங்கள் பொறிக்கப்பட்டுள்ளது. சப்த கன்னிகளின் ராகு கேது பரிகாரத்திற்காக இத்திருக்கோவில் பிரதிஷ்டை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

காலப்போக்கில் இத்தலத்தை  சுற்றி மரங்கள், செடி,புதர்கள் அண்டவே இத்திருக்கோவில் நிலை குலைந்து போனது. பிறகு அதனை பேரூர் ஆதினம் குருமகா சன்னிதானம் கயிலைகுருமணி தவத்திரு சாந்தலிங்க இராமசாமி அடிகளாரின் முயற்சியால் முன்மிருந்த வடிவத்திலேயே சீரமைக்கப்பட்டது.

லிங்க வடிவில் நாகேஸ்வரர்:

நான்கு கோபுரங்கள் அமைந்திருக்கும் இத்திருக்கோவிலின் நுழைவில் ஐந்து தலை நாங்க விளக்குத் தூண் உள்ளது.  இங்கு நாகபரணத்துடன் கூடிய அலங்காரத்தில் லிங்க வடிவில் காட்சியளிக்கும் மூலவர் நாங்கேஸ்வரர் ராகு கேது மூர்த்தியாக அருள்புரிகின்றார். தினசரி ராகு கால நேரங்களில் இங்கு பாலபிஷேகம் சிறப்பாக  நடைபெறுவது வழக்கம். குறிப்பாக பசும் பால் மட்டுமே அபிஷேகத்திற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் இக்கோவிலில் முத்துவிநாயகர், முத்துவாளி அம்மன், தட்சிணாமூர்த்தி, முத்துகுமாரசாமி, குலசேகர விண்ணகரப்பெருமாள், நவ கிரகங்கள் மற்றும் கால பைரவர் ஆகியோரும் இருக்கின்றனர்.

தோஷங்களை நிவர்த்தி செய்யும் பாலபிஷேகம்:

ராகு கேது தோஷங்கள் உள்ளவர்கள் இங்கு ராகுகாலத்தில் பாலபிஷேகம் செய்து வழிபட்டால், தோஷங்கள் நீங்குவதாக பக்தர்களால் நம்பப்படுகிறது.  அதுமட்டுமின்றி, பிரதோஷம் , பௌர்ணமி, கிருத்திகை, அஷ்டமி ஆகிய நாட்களிலும் சிறப்பு அபிஷேக அலங்கார பூஜைகள் நடைபெறும் இத்திருக்கோவிலில் மகாசிவராத்திரி மிக விமர்சையாக நடைபெறும்.

தரிசன நேரம் :

காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரையிலும், மாலை 4 மணி முதல்  6 மணி