இந்தியாவில் பாதுகாப்பு இல்லை; அமெரிக்காவில் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்கள்

அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழையும் இந்தியர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது என்ற தகவல் வெளியாகியுள்ளது.

அக்டோபர் மாதத்தில் மட்டும் சுமார் 96, 000-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றுள்ளனர் என்று அமெரிக்கா சுங்கம் மற்றும் எல்லைப் பாதுகாப்பு அமைப்பு (UCBP)  தெரிவித்திருக்கிறது.

கடந்த 2019-20 ஆண்டில் சட்டவிரோதமாக நுழைந்த 19,883 இந்தியர்கள் பிடிக்கப்பட்டனர். இதில், அதிகம் கைது செய்யப்பட்டது இளைஞர்கள் என்பது தெரியவந்துள்ளது. மேலும், கடந்த ஆண்டு கைதானவர்கள் எண்ணிக்கையை ஒப்பிடுகையில் தற்போதைய எண்ணிக்கை 5 மடங்கு அதிகரித்து இருக்கிறது. சட்ட விரோதமாக நுழைய முயன்ற 96,917 இந்தியர்களில், கனடா எல்லையில் 30,010 பேரும், மெக்சிகோ எல்லையில் 41,770 பேரும் பிடிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், கூடுதல் தகவலாகக் கைதானவர்கள் இந்தியாவில் தங்களுக்குப் பாதுகாப்பு இல்லை எனத் தெரிவித்திருப்பதாக அந்நாட்டு அதிகாரிகள் கூறுகின்றனர்.