கட்டுமான பொறியாளர் சங்கத்தின் புத்தாண்டு கூட்டம்

கோவை மண்டல கட்டுமான பொறியாளர் சங்கத்தின் (COZENA) புத்தாண்டு சிறப்பு கூட்டம் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் பீளமேடு அருகிலுள்ள கோ இந்தியா ஹாலில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியின் சங்கத்தின் தலைவர் ஜெயவேல் தலைமை தாங்கினார் . மேலும் செயலாளர் ராஜதுரை கடந்த மாதங்களில் நடைபெற்ற சங்கத்தின் செயல்பாடுகளை தொகுப்பாக வழங்கினார். அதன்பின்னர் பொருளாளர் பழனிசாமி கடந்த மாதங்களின் கணக்குகளை தாக்கல் செய்தார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கோவை தொழில்நுட்பக் கல்லூரியின் முன்னாள் பேராசிரியர் பெருமாள், சங்க நிர்வாகிகள் மற்றும் சங்க உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் சிறப்பு விருந்தினர் பேராசிரியர் பெருமாள், கட்டமைப்பு சம்பந்தமான தொழில்நுட்ப கருத்தரங்கு நடத்தி பொறியாளர்களின் கேள்விகளுக்கு விளக்கங்கள் கூறினார்.