சாலை விபத்துகளில் முதலிடம் பிடித்த கோவை!

சாலை விபத்துகளில் உயிரிழப்போரின் எண்ணிக்கை கோவையில் அதிகரிப்பு.

தமிழ்நாடு அரசின் மாவட்ட வாரியாக விபத்துகள் ஏற்படும் எண்ணிக்கை குறித்து ஆய்வறிக்கை ஒன்று அண்மையில் வெளியாகி உள்ளது. இதில் ஒவ்வொரு ஆண்டும் சாலை விபத்தினால் உயிரிழப்பவர்கள் சென்னை நகரிலே அதிகமாக இருக்கும். இந்நிலையில் அதனை  தடுக்கும் விதமாக சென்னை நகரில்

பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தனர். இவ்வாறு செய்ததின் மூலம் விபத்தில் சிக்கியவர்களை  உடனடியாக மீட்க முடிந்தது. மேலும், உயிரிழப்போரின் எண்ணிக்கையும்  கணிசமாக குறைந்துள்ளது என ஆய்வறிக்கையில் வெளியிட்டுள்ளனர்.

முதலிடத்தில் கோவை!

யாரும் எதிர்பாராத  விதத்தில்,கோவை மாவட்டம் அதிக சாலை விபத்துகளில் உயிரிழக்கும் மாவட்டங்களில் முதல் இடத்தை  பிடித்துள்ளது.  இந்த ஆய்வறிக்கையின் படி கோவையில் விபத்துகளும் அதில் ஏற்படும் உயிர்ழப்புகளும் 700 பேராக அதிகரித்துள்ளன.

இதற்கு அடுத்ததாக செங்கல்பட்டில் 585 பேர் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனர்.