மெல்ல தமிழ் இனி சாகும் என்ற சொல் என்னுள் தாக்கத்தை ஏற்படுத்தியது!

– பெரியசாமி‌த் தூரன்‌ 115ஆவது ஆண்டு விழாவில் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி

உலக தமிழ் பன்பாட்டு‌ மையம் சார்பில் பெரியசாமி‌த் தூரன்‌ 115ஆவது ஆண்டு விழா‌‌வையொட்டி‌ இரண்டு நாள் கருத்தரங்கு தொடக்க விழா டாக்டர் என்.ஜி.பி கலை அறிவியல் கல்லூரியில் திங்கட்கிழமை நடைபெற்றது.

விழாவை உலக தமிழ் பன்பாட்டு‌ மையத்தின் தலைவர் டாக்டர் நல்ல ஜி பழனிசாமி, பாரதிய வித்யா பவன் தலைவர் கிருஷ்ணராஜ் வாணவராயர், என்.ஜி.பி கல்லூரியின் செயலாளர் டாக்டர் தவமணிதேவி பழனிசாமி ஆகியோர் குத்துவிளக்கு ஏற்றி துவக்கி வைத்தனர். வாழ்த்துரை வழங்கிய தவமணிதேவி நிகழ்ச்சியில் பங்கேற்ற அனைவரையும் வரவேற்றார்.

பின்னர், நிகழ்ச்சியில் பேசிய நல்ல ஜி பழனிசாமி, மெல்ல தமிழ் இனி சாகும் என்ற சொல் என்னுள் மிகுந்த வேதனையை ஏற்படுத்தும். ஆகையால் தான் இந்த உலக தமிழ் பன்பாட்டு‌ மையம் துவங்கப்பட்டது என்று கூறியவர், மாணவர்களிடம் கல்வியில் காந்தியவாதி, தமிழ் களஞ்சியத்தின் முன்னோடி தூரனின் பெருமைகளை மேற்கோள் காட்டி பேசினார்.

மேலும், நிகழ்சியின்‌‌ முக்கிய நிகழ்வாக பெரியசாமித்தூரன் நாடகங்கள் மற்றும் தமிழோசை ஆகிய நூல்களை கிருஷ்ணராஜ் வாணவராயர் வெளியிட அதனை நல்ல ஜி பழனிசாமி பெற்றுக் கொண்டார்.

அதன் பிறகு பேசிய கிருஷ்ணராஜ் வாணவராயர், பொருளாதாரத்தில் மிக‌‌ வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் இந்தியா உள்ளது. பல்வேறு துறைகளில் நீங்கள் சாதிக்க வேண்டும் என்றால் சயின்ஸ், பிசிக்ஸ் மட்டும் படித்தால் போதாது பெரியசாமி‌த் தூரன்‌ போன்றவர்களின் தியாக வாழ்க்கை அறிந்து கொள்ள வேண்டும். புத்தகங்கள் படியுங்கள் எனக் கூறினார்.

இதனையடுத்து, மாநில பல்கலைக்கழகத்தின்‌ பேராசிரியர் மற்றும் தமிழ்த்திறனாய்வாளர் முனைவர் பஞ்சாங்கம் சிறப்புரை‌‌ வழங்கினார்.

கருத்தரங்கத்தில் தமிழ் அறிஞர்கள் பலர் கலந்து கொண்டு கட்டுரை வழங்கினர்.

இதில், பெரியசாமி‌த் தூரன்‌ குடும்பத்தினர் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டது  சிறப்பு அம்சமாக அமைந்தது.