எஸ்.என்.எம்.வி கல்லூரியில் கணினி அறிவியல் மாணவர்களுக்கான சான்றிதழ் பயிற்சி வகுப்பு!

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் தகவல் மற்றும் தொடர்பு தொழில்நுட்பம் (ICT) அகாடமி சார்பாகக் கணினி அறிவியல் பயிலும் மாணவர்களுக்குச் செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் சான்றிதழ் வகுப்பு நடைபெற்றது.

இந்நிகழ்வின் சிறப்பு விருந்தினராக சென்னை ஐ.சி.டி அகாடமி மேம்பாட்டு தலைமைப்பயிற்சியாளர் வெங்கடேஷ் பங்கேற்றார். அவர் தனது உரையில், பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் டிஜிட்டல் தரவுகள் மீதான தாக்குதல்கள் பற்றிய அறிவை உயர்த்துவதற்காக ஏற்பாடு வடிவமைக்கப்பட்டுள்ளது., என்றார். மேலும், பாதுகாப்பு முறைகள், நெட்வொர்க்கிங் நெறிமுறைகள், ஃபயர்வால்கள், இணைய பயன்பாட்டு பாதிப்புகள் மற்றும் பாதுகாப்பு வழிமுறைகள் பற்றி அறிமுகத்தினையும் இப்பயிற்சியின் முக்கியத்துவம் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதில் எஸ்.என்.எம்.வி. கல்லூரி முதல்வர் சுப்பிரமணி, செயற்கை நுண்ணறிவு மற்றும் இயந்திர கற்றல் துறைத்தலைவர் வினோத் குமார் மற்றும் 100க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்துகொண்டு  பயிற்சி சான்றிதழைப் பெற்றனர்.