மருத்துவம், இயற்பியலுக்கான நோபல் விருது அறிவிப்பு! 

இந்த ஆண்டின் இயற்பியலுக்கான நோபல் விருது மூன்று விஞ்ஞானிகளுக்கு அறிவிக்கப்பட்டள்ளது.
மருத்துவம், இயற்பியல், பொருளாதாரம், இலக்கியம், அமைதி, வேதியியல் உள்ளிட்ட ஆறு துறைகளில் சிறந்த கண்டுபிடிப்புகள், சேவைகள் நிகழ்த்தி சாதனை படைத்தவர்களுக்கு  உலகின் உயரிய விருதான நோபல் விருது வழங்கப்படுவது வழக்கம்.
அந்த வகையில், இந்த ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அறிவிப்புகள் ஸ்வீடன் தலைநகர் ஸ்டால்ஹோமில் நேற்று முதல் அறிவிக்கப்பட்டு வருகிறது. நோபல் அமைப்பின் செயலாளர் தாமஸ் பெர்ல்மன் விருது அறிவிப்பை வெளியிட்டார். அந்த வகையில், மருத்துவத்திற்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியானது.
இதில், கொரோன தொற்றுநோய்க்கு எதிராக எம்.ஆர்.என்ஏ எனும் தடுப்பூசிகளைக் கண்டுபிடித்த ஹங்கேரி சாகன் பல்கலை பேராசிரியர் கேட்டலின் கரிக்கோ மற்றும் அமெரிக்காவின் பென்சில்வேனியா பல்கலையின் பேராசிரியர் ட்ரூ வீய்ஸ்மேன் ஆகியோருக்கு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், இயற்பியல் துறையில் சாதித்தவர்களுக்கான நோபல் பரிசு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த விஞ்ஞானிகளான பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ் மற்றும்  ஆனி ஹுலியர் ஆகியோருக்கு இந்த ஆண்டிற்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.