பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் கலை விழா!

கோவை பிஷப் அம்புரோஸ் கல்லூரியில் “கலை விழா 2023” நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

மாணவர்களின் திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த இக்கலை நிகழ்ச்சியில், நடிகர் அனீஸ், பேராசிரியர் செந்தில் சக்கரவர்த்தி, நடன பயிற்சியாளர் விக்னேஷ், இசை ஆசிரியர் மார்சால் ராஜ் ஆகியோர் சிறப்பு நடுவர்களாக பங்கேற்றனர்.

மேலும், பாரதியார் பல்கலையின் சமூகவியல் துணைத் தலைவர் சம்பத் குமார்  சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினர். நிகழ்ச்சியில், கல்லூரியின் செயலர் ஜெரோம், முதல்வர் பீட்டர் ராஜ், துணை முதல்வர் மற்றும் டீன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலும், கலை விழாவை  ஒருங்கிணைப்பாளர் பாலகுருநாதன் வழிநடத்தினார்.