கே.பி.ஆர். கல்லூரி மாணவர்கள் தேசியப் போட்டியில் பங்கேற்பு!

கே.பி.ஆர். கலை, அறிவியல் மற்றும் ஆராய்ச்சிக் கல்லூரியின் மாணவர்கள் தேசிய தால் சைனிக் முகாமில் பங்கேற்றனர்.

மே மாதம் தொடங்கிய பயிற்சி முகாமில் ஒன்பது முகாம்களில் கே.பி.ஆர். கல்லூரி மாணவர்கள் சிறப்பாக செயலாற்றினர். இதனையடுத்து, டெல்லியில், செப்டம்பர்19-ஆம் தேதி தொடங்கி நடந்துவரும் தேசிய தால் சைனிக் முகாமில், தடை, பயிற்சி, கூடாரம் பிட்ச்சிங், துப்பாக்கிச் சுடும் பிரிவில் அபிஷேக், மௌனிகா, AITSC சர்வீஸ் துப்பாக்கிச் சுடும் பிரிவில் லோகேஷ் ஆகிய மாணவர்கள் தமிழ்நாடு தரைப்படை கோவை குரூப் கேடட்கள் பிரிவில் தமிழகத்தின் சார்பில் பங்கேற்கின்றனர்.

கல்லூரி முதல்வர் முனைவர் கீதா மாணவர்களுக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, பயிற்றுநர் ஸ்ரீதருக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக்கொண்டார்.