என்.ஜி.பி கல்லூரியில் மண்டல அளவிலான கலை இலக்கியப் போட்டிகள்!

என்.ஜி.பி. கலை அறிவியல் கல்லூரியின் இளங்கோவடிகள் தமிழ்மன்றம் மற்றும் இராமலிங்கர் பணி மன்றம் இணைந்து மண்டல அளவிலான கலை இலக்கியப் போட்டிகளை சனிக்கிழமை நடத்தின.

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற இப்போட்டியில், கோவை, நீலகிரி, திருப்பூர், பொள்ளாச்சி, ஈரோடு, திருச்சி, காரைக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 400-க்கும்  மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவர்கள் கலந்து கொண்டனர். இதில், மாணவர்களுக்குக் கட்டுரை, இசை, மனனம், பேச்சு ஆகிய பிரிவுகளில்  போட்டிகள் நடைபெற்றன.

என்.ஜி.பி. கல்வி குழுமங்களின் இயக்குநர் முத்துசாமி, கல்லூரியின் முதல்வர்  சரவணன், தமிழ்த்துறைத் தலைவர் நீ. குப்புச்சாமி ஆகியோர் கலந்து கொண்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கினர்.