என்.ஜி.பி. கல்லூரியில்  “ஸ்வச்சதா பக்வாடா” நிகழ்ச்சி 

டாக்டர். என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், வணிகவியல் நிதித் துறை சார்பில் “ஸ்வச்சதா பக்வாடா” நிகழ்ச்சி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

இந்நிகழ்வில் “ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக்கைக் கட்டுப்படுத்துதல் மற்றும் சுகாதார வசதிகள் என்ற குறும்படத்தை நிதித் துறை மாணவர்கள் தயாரித்தனர்.

மேலும், தொழிற்சாலை கழிவுகள் மற்றும் மனித அலட்சியத்தால் ஏற்படும் பிளாஸ்டிக்கை தடுப்பதற்கான விழிப்புணர்வு வீடியோக்களை உருவாக்கினர்.

இதில், நிதித்துறை மாணவர்கள் கலந்து கொண்டு வளிமண்டலத்தில் பிளாஸ்டிக் எவ்வாறு பாதிப்பை ஏற்படுத்தியது மற்றும் சுற்றுச்சூழலை எவ்வாறு பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வால் பயனடைந்தனர்.