இந்துஸ்தான் பொறியியல் கல்லூரி சார்பில் மூன்று நாள் பயிற்சித் திட்டம்

இந்துஸ்தான் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறையானது, அறிவியல் சார்ந்த விழிப்புணர்வை விவசாயிகளிடம் கொண்டு செல்வதில் பெரும் பங்களிகின்றது – கல்லூரி முதல்வர் ஜெயா

கோவை, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி மற்றும் தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் [TNSCST- DIT-புதுமை தொழில்நுட்பத்தைப் பரப்புதல்) நிதி உதவி மற்றும் வழிகாட்டுதலுடன் மின் மற்றும் மின்னணுவியல் துறை இணைந்து “IoT தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி மாடித் தோட்டம் பயன்பாடுகளுக்குச் சூரிய சக்தியில் இயங்கும் நீர் உந்தி அமைப்பு செயல்படும் விதம் மற்றும் செயல் விளக்கம் குறித்து  மூன்று நாள் [31.08 2023 – 02.09.2023] பயிற்சித் திட்டம் நடைபெற்றது.

இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி முதல்வர் ஜெயா குத்துவிளக்கேற்றித் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சேகர் மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் துறைத் தலைவர் அனந்தமூர்த்தி வரவேற்புரை வழங்கினர்.

கல்லூரி முதல்வர் ஜெயா பேசுகையில் இது போன்ற பயிற்சி திட்டத்தின் மூலம் விவசாய துறையில் அறிவியல் சார்ந்த சமுதாய விழிப்புணர்வை விவசாயிகளிடம் கொண்டு செல்வதில் இந்துஸ்தான் கல்லூரியின் மின் மற்றும் மின்னணுவியல் துறையின் பங்களிப்பு சிறப்பாக அமைந்துள்ளதாகத் தெரிவித்தார்.

சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் சுற்றுச்சூழல் அறிவியல் துறை பேராசிரியர் சாரா பர்வின் பானு கமலுதீன் கலந்துகொண்டு நிகழ்ச்சியைத் துவக்கி வைத்து, சூரிய சக்தி மூலம் பெறப்படும் மின்சாரத்தை விவசாயம் மற்றும் மாடித் தோட்டம் போன்ற இடங்களில் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் நன்மைகள் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை வழங்கினார்.

இரண்டாம் நாள் நிகழ்ச்சியில் கல்லூரி வளாகத்தில் அமைந்துள்ள 75  kw சூரிய மின் நிலையம் மற்றும் சூரிய சக்தியில் இயங்கும் நீர் உந்தி அமைப்பு செயல்படும் விதம் குறித்து செயல் விளக்கமளிக்கப்பட்டது.

மூன்றாம் நாள் நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய அரசின் குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் வளர்ச்சி நிறுவனம் உதவி இயக்குநர் கயல்விழி கலந்துகொண்டு, தொழில் முனைவோர்களுக்கான வழிகாட்டுதல் மற்றும் நெறிமுறைகள் குறித்து விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பங்கேற்ற அனைத்து பயனாளர்களுக்கு சான்றிதழ்களை வழங்கினார்.

இதில் கல்லூரி அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், செயலாளர் பிரியா சதிஷ் பிரபு, கல்லூரியின் தலைமை நிர்வாக அலுவலர் கருணாகரன், கல்லூரி முதல்வர் ஜெயா மற்றும் டீன் மகுடேஸ்வரன் ஆகியோர் கலந்துகொண்டு, விவசாயிகள் மற்றும் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் சேகர், துறைத் தலைவர் அனந்தமூர்த்தி மற்றும் மின் மற்றும் மின்னணுவியல் துறை ஆசிரியர்களையும் வாழ்த்தினார்கள்.

இறுதியில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சேகர் பேசுகையில் மூன்று  நாட்கள் நடைபெற்ற  நிகழ்ச்சிகளின் தொப்புளை வாசித்து, நிதி உதவி வழங்கிய தமிழ்நாடு மாநில அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கவுன்சில் [TNSCST) மற்றும் பங்கு பெற்ற விவசாயிகளுக்கும் நன்றி தெரிவித்தார்.