என்.ஜி.பி. கலை கல்லூரியில் தேசிய கருத்தரங்கு

கோவை, டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் கணக்குப்பதிவியல் & வரித்துறை, வங்கி & காப்பீட்டுத்துறை, நிறுமச் செயலரியல் துறை, பன்னாட்டு வணிகத்துறை, மேலாண்மைத் துறை,  மற்றும்  கொடிசியா ஆகியவை இணைந்து வணிக டிஜிட்டல் மாற்றம் – வாய்ப்புகள் மற்றும் சவால்கள் (DTBOC- 2023)” என்னும் தலைப்பில் தேசியக் கருத்தரங்கை செவ்வாய்க்கிழமை நடத்தியது.

இக்கருத்தரங்கில் வணிகவியல் துறை புல முதன்மையர் பானுதேவி வாழ்த்துரை வழங்கினார். கணக்குப்பதிவியல் & வரித்துறை துறையின் தலைவர் ஸ்நேகலதா கருத்தரங்கின் முக்கியத்துவம் பற்றி எடுத்துரைத்தார்.

அதனைத் தொடர்ந்து, டாக்டர் என்.ஜி.பி. கல்லூரியின் பொறுப்பு முதல்வர் சரவணன் கலந்து கொண்டு, உலகளாவிய மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சியின் அம்சத்தில் 21-ஆம் நூற்றாண்டில் நிலையான வணிக டிஜிட்டல் மாற்றம் – வாய்ப்புகள் மற்றும் சவால்கள் பற்றிய அவசியத்தை எடுத்துரைத்தார்.

சிறப்பு விருந்தினராகக் கோவை.கோ நிறுவனத்தின் தரவு அறிவியல் தலைவர் செல்வராஜ் முருகேசன் கலந்துகொண்டு கருத்தரங்கைத் துவக்கி வைத்தார். அவர் தனது உரையில், உலகளவில் தொழில் முனைவோர் வளர்ச்சி மற்றும் வணிக டிஜிட்டல் மாற்றத்தின் மூலம் குறிப்பிடத்தக்கப் பங்களிப்பு குறித்து மாணவர் சமூகத்திற்கு எடுத்துரைத்ததோடு, தொழில் முக்கியத்துவத்தையும் எதிர்காலத்தில் தொழில்நுட்ப முன்னேற்றத்தின் தாக்கத்தைப் பற்றியும் பகிர்ந்து கொண்டார்.

இதை அடுத்து, பெங்களூரூ, கிரியேட்டிவ்வில்லேவின் வணிக உத்தி மற்றும் படைப்பு இயக்குநர் சஞ்சய் பாலசுப்ரமணி, பேசுகையில் கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்காலத்தில் தொழில்துறை ஏற்படும் டிஜிட்டல் மாற்றம், 4.0 இன் நிகழ் நேர உதாரணங்களையும் எதிர்காலத்தில் தொழில்துறை 5.0 இன் எதிர்பார்ப்பு குறித்து எடுத்துரைத்தார்.

மேலும், டாக்டர் என்.ஜி.பி  கல்விக் குழுமங்களின் இயக்குநர் முத்துசாமி பேசுகையில், டிஜிட்டல் மாற்றத்தின்  காரணமாகத் தொழில் துறையில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பற்றிய தகவல்களைக் குறித்தும், சிறு மற்றும் குறு, நடுத்தர தொழில் முனைவோர் மூலமாக இந்தியாவில் ஏற்பட்டுள்ள பொருளாதார மேம்பாடு பற்றிய தகவல்களைக் குறித்தும் எடுத்துரைத்தார்.

இதன் நிறைவு விழாவில், கொரோனா தொற்றுக்குப் பின் வணிக டிஜிட்டல் மாற்றம் – வாய்ப்புகள் மற்றும் சவால்கள் எனும் தலைப்பில் செல்வகுமார் உரையாற்றினார். அதனைத்தொடர்ந்து, கருத்தரங்கம் தொடர்பான அறிக்கையைப் பன்னாட்டு வணிகத்துறை, வங்கி & காப்பீட்டுத்துறைத் தலைவர் ரேவதி வாசித்தார்.

இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரிகளைச் சார்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் உட்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். கருத்தரங்கின் நிறைவாக ஆய்வுக் கட்டுரை வாசித்த மற்றும் கலந்து கொண்ட மாணவர்களுக்குச் சான்றிதழ் வழங்கப்பட்டது.