ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் வரவேற்பு விழா

ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா மற்றும் புத்தாக்க பயிற்சி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.

விழாவிற்குக் கல்லூரி முதல்வர் அலமேலு அனைவரையும் வரவேற்றார். எஸ்.என்.ஆர்.சன்ஸ் சாரிடபிள் டிரஸ்ட் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாரயணசுவாமி தலைமை தாங்கினார் .

இதில் சிறப்பு விருந்தினராகக் கோவை காக்னிசன்ட் டெக்னாலஜி மூத்த இயக்குநர் ஜெயகிருஷ்ணன் அப்புசாமி கலந்து கொண்டு, முதலாம் ஆண்டு மாணவர்களிடம் சிறப்புரை ஆற்றினார். அவர் பேசுகையில்,  தொழில் நுட்ப மாற்றத்தை மாணவர்கள் வரவேற்கும் பொருட்டு கற்றுக்கொள்வதில் ஆர்வம் மிகுதி வைத்திருக்க வேண்டும் எனவும் கூட்டு முயற்சியே வெற்றி பெற வைக்கும் என்றும் ஆராய்ச்சி முயற்சியில் தோல்வி கொண்டாலும் துவலாதிருக்க வேண்டும் என கூறினார்.

இக்கல்லூரியில் 1995-1999 கல்வி ஆண்டில்  பயின்ற முன்னாள் மாணவர்களான திருவனந்தபுரம் ஐரோசியா பிம் சர்வீசஸ் டெக்னாபார்க் துறையின் பொது மேலாளர் பாபு கோபாலகிருஷ்ணன், பெங்களூரு சிஸ்கோ நிறுவனத்தின் மூத்த பொறியியல் மேலாளர் ராஜேஸ்வரி ராஜன் ஆகியோர் கௌரவ விருந்தினர்களாகக் கலந்து கொண்டு மாணவர்கள் எவ்வாறு தங்களின் நான்கு வருடப் பட்டப்படிப்பைத் திறம்பட எதிர்கொள்ள வேண்டும், பல்வேறு நிறுவனங்கள் தங்களின் எதிர்பார்ப்பு  எவ்வாறு உள்ளது என்பதனையும் தெளிவாக எடுத்துரைத்தனர்.

மேலும், இரண்டாம் நாள்  விழாவிற்குச் சிறப்பு விருந்தினராக இஷட் எப் குழுவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு துறைத் தலைவர் ஸ்ரீனிவாசன் நாயுடு, கௌரவ விருந்தினராகப் பெங்களூரு என்கோரா இன்னோவேஷன்ஸ் லேபின் சீனியர் அர்கிடெக்ட் நாராயணன் கலந்துகொண்டனர். இறுதியில் ரகுநாத் நன்றியுரை கூறினார். விழா ஏற்பாடுகளைப் பேராசிரியர் விசித்ரா சிவாஜி செய்திருந்தார்.