கே.ஜி.மருத்துவமனைக்கு புதிய அங்கீகாரம்

கே.ஜி.மருத்துவமனையின் பொன்விழா ஆண்டு மற்றும் மருத்துவமனை நாளின் ஒரு பகுதியாகச் சுகாதார அமைப்பான (CAHO), கே.ஜி.மருத்துவமனையைத்  தர மேம்பாட்டு மையமாக (CQP) அங்கீகரித்துள்ளது.

 

இதன்  என்ஏபிஹெச் (NABH) , நர்சிங் எக்ஸலன்ஸ், என்ஏபிஎல் (NABL) மற்றும் சி க்ரீன் ஓடி  (cGreen OT)  ஆகியவற்றின் அடிப்படையில் இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டது.  இம்மருத்துவமனை இந்தியா அளவில் 37வது மையமாக அங்கீகாரம் பெற்றுள்ளது.  இதற்கான  சான்றிதழைக் கோவை அரசு மருத்துவமனை டீன் நிர்மலா முன்னிலையில்,  கே.ஜி.மருத்துவமனை தலைவர் கே.ஜி.பக்தவத்சலமிடம் CAHO அமைப்பின் பொதுச் செயலாளர் லல்லு ஜோசப் வழங்கினார்.

 

இதனைத் தொடர்ந்து, நிகழ்வில்  தேசிய தர மேம்பாட்டுக்  கருத்தரங்கம் –  2024 நடைபெற்றது.  இதில் தரம் தொடர்பான அனைத்து பயிற்சி நிகழ்ச்சிகளும் மேற்கொள்ளப்பட்டது. பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த பேச்சாளர்கள், சுகாதாரத் தரம் மற்றும் நோயாளிகளின் பாதுகாப்பு குறித்த தங்கள் அனுபவத்தைப் பகிர்ந்தனர்.

 

இதில் இந்திய மருத்துவ சங்கம் கோயம்புத்தூர் தலைவர் பிரியா கார்த்திக் பிரபு, மருத்துவமனை நிர்வாக அறங்காவலர் அசோக் பக்தவத்சலம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.