புதிய போக்குவரத்து காவல் துணை ஆணையர் பொறுப்பேற்பு

கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையர் ராஜராஜன் திங்கட்கிழமை பொறுப்பேற்று கொண்டார்.

கோவை மாநகர போக்குவரத்து காவல்துறை துணை கமிஷனராக பணியாற்றி வந்த மதிவாணன் சேலம் மாநகர தெற்கு துணை ஆணையராக பணியிட மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக சேலம் மாநகர தெற்கு துணை ஆணையர் ராஜராஜன் கோவை மாநகர போக்குவரத்து காவல் துணை ஆணையராக நியமனம் செய்யப்பட்டார்.
புதியதாக பொறுப்பேற்று கொண்ட ராஜராஜனுக்கு காவல் அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டனர்.