எஸ்.என்.எம்.வி கல்லூரியில் வரவேற்பு விழா

ஸ்ரீ நேரு மஹா வித்யாலயா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் முதுகலை முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான வரவேற்பு விழா திங்கட்கிழமை நடை பெற்றது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக பேச்சாளர் சந்திரசேகரன் கலந்து கொண்டு, மாணவர்கள் பெற்றோரின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து உழைப்புக்கும் நேர்மைக்கும் இலட்சியத்திற்கும் முக்கியத்துவம் தர வேண்டும். மேலும் கல்லூரிப் பருவம் இனிமையான பருவம் என்றும் மாணவர்களிடம் உள்ள திறமை யாரிடமும் இல்லை .அவர்களை மேலும் மெருகேற்றுவதே ஆசிரியர்களின் பணி என்றும் கூறினார், இலக்கியம் படித்தால் மனிதனாகலாம் ஒரு மனிதன் கடந்து போன பருவங்களிலே திரும்பி பார்க்க இயல்பாக உள்ளது கல்லூரி என்றும் கல்லூரி வாழ்க்கையின் சிறப்பை எடுத்துரைத்தார்.

தமிழர் நாகரிகம் 3000 ஆண்டுகள் பழமையாக நாகரிகம் மனிதன் வாழ்க்கையில் ஒரு முறையாவது செல்ல வேண்டிய இடம் கீழடி என மாணவர்களுக்கு அறிவுரை ஆற்றினார். மேலும் ஆசிரியர்களின் பணியே சிறந்த பணி என்று ஆசிரியர்களின் சிறப்பினையும் எடுத்துரைத்தார்.

கல்லூரி முதல்வர் சுப்பிரமணி  சிறப்புரை வழங்கினார். அதனை தொடர்ந்து கல்லூரியின் மேலாண்மைத்துறை இயக்குனர் முத்துக்குமார் மற்றும் கல்லூரியின் வணிகப்புலத் தலைவர் பத்மநாபன் இவ்விழாவில் கலந்துக் கொண்டனர்.