கோவை கிணத்துக்கடவில் மின்தடை ஏற்படும் பகுதிகள் அறிவிப்பு

கோவை கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் வெள்ளிக்கிழமை மாலை 3:00 முதல் மாலை 6:00 மணி வரை மின்தடை ஏற்படும் என்று மின்வாரியம் அறிவித்துள்ளது.

ஒத்தக்கால்மண்டபம் மற்றும் வாட்டர் ஒர்க்ஸ் மின்பாதையில், பகவதிபாளையம், சிக்கலாம்பாளையம், கிணத்துக்கடவு, சொலவம்பாளையம், ஏலுார், வடபுதுார், கல்லாபுரம், சிங்கையன்புதுார், சொக்கனுார், முத்துக்கவுண்டனுார், பாலார்பதி, வீரப்பகவுண்டனுார் முதலிய கிணத்துக்கடவு சுற்றுவட்டாரப் பகுதிகளில் மின்தடை ஏற்படும்.