சஞ்சு சாம்சனுக்கு தொடர்ந்து வாய்ப்பு கிடைக்குமா

இந்திய கிரிக்கெட் அணியின் திறமை வாய்ந்த வீரராக அறியப்படுபவர் சஞ்சு சாம்சன். அண்டர்19 காலத்தில் இருந்தே ரசிகர்களிடம் பெயர் பெற்றவர்

இந்திய அணிக்காக 2015 ஆம் ஆண்டிலேயே அறிமுகமான சஞ்சு சாம்சன், 7 ஆண்டுகளில் வெறும் 16 – T20 போட்டியில் பதினோரு போட்டிகளில் மட்டும் தான் இந்திய அணிக்காக விளையாடி இருக்கிறார்.

அந்த அளவுக்கு சஞ்சு சாம்சனுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் வாய்ப்பு வழங்காமல் பிசிசிஐ ஏமாற்றிருக்கிறது. இதனை தொடர்ந்து இந்திய கிரிக்கெட்டில் வாய்ப்பு கிடைக்காத பல வீரர்கள் வெளிநாட்டிற்கு சென்று விளையாட துவங்கிவிட்டனர்.

அவரை தொடர்ந்து உத்தப்பா போன்ற சீனியர் வீரர்களும் இந்திய கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றுவிட்டு வெளிநாட்டிற்கு விளையாட சென்று விட்டனர்.இதன் பின்னர் சஞ்சு சாம்சனுக்கு வாய்ப்பு கிடைக்காததால் அவரை இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து விலகுமாறு அண்மையில் ரசிகர்களே கருத்து தெரிவித்தனர்.

இந்நிலையில் அயர்லாந்து கிரிக்கெட் வாரியம் சஞ்சு சாம்சனை தங்கள் நாட்டுக்கு விளையாட கூறி அவரிடம் பேசி வந்தனர். அந்த அழைப்பின் போது, உங்களுக்கு அனைத்தையும் வழங்குகிறோம் எங்கள் நாட்டிற்கு வந்து அயர்லாந்து அணிக்காக விளையாடுங்கள் என்று கோரிக்கை விடுத்தது.

அயர்லாந்து அணிக்காக விளையாட வேண்டும் என்றால் முதலில் இந்திய கிரிக்கெட் அணியில் இருந்து ஓய்வு பெற வேண்டும். ஆனால் சஞ்சு சாம்சன் நாட்டின் மீது உள்ள பற்றால் இந்த வாய்ப்பு வேண்டாம் என நிராகரித்து உள்ளார்.

வாய்ப்பு கிடைக்க வில்லை என்றாலும் தொடர்ந்து இந்திய கிரிக்கெட் அணியில் தான் கடைசி வரை இருப்பேன், பிசிசிஐ அனுமதி அளித்தால் வெளிநாட்டு T20 லீக் போட்டிகளில் விளையாடுவேன் என்பதில் அளித்துள்ளார் .

சஞ்சு செய்த செயல் எல்லாரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தி உள்ளது

 

– இ. ரா. சரவணா