கோவை குற்றாலத்தில் தண்ணீர் வரத்து குறைந்தது.

கோவை மேற்கு மலைத் தொடர்ச்சி பகுதியில் உள்ள கோவை குற்றாலம், முக்கிய சுற்றுலா தலமாக உள்ளது. இந்த நிலையில் சிறுவாணி நீர்பிடிப்பு பகுதியில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை பெய்தது.

இதன் காரணமாக கோவை குற்றாலத்தில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. எனவே அங்கு குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு வனத்துறை தடை விதித்தது. இந்த நிலையில் கோவை குற்றாலத்தில் தற்போது தண்ணீர் வரத்து சற்று குறைந்து உள்ளது.

எனவே அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க மீண்டும் அனுமதி அளிப்பது என்று வனத்துறை அதிகாரிகள் முடிவு செய்து உள்ளனர். கோவை குற்றாலத்தில் தற்போது சிறிய அளவில் பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. எனவே இன்னும் ஒருசில நாட்களில் அங்கு சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி தரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கான முன்னேற்பாட்டு பணிகளில் வனத்துறை ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.ஆடி பெருக்கு பண்டிகையை முன்னிட்டு சுற்றுலா பயணிகள் இன்று காலை கோவை குற்றாலத்துக்கு குளிப்பத ற்காக வந்திருந்தனர். ஆனால் அங்கு அவர்களுக்கு அனுமதி தரப்படவில்லை. எனவே அவர்கள் சின்னாறு பகுதியில் உள்ள ஆற்றில் குளித்து முடித்து பத்திரமாக வீடு திரும்பினர்.