இந்துஸ்தான் தொழில்நுட்பக் கல்லூரி மாணவிக்கு சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட தன்னார்வலர் விருது

நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக சென்னை அண்ணா பல்கலைக்கழகம் விருது வழங்கும் விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில் கோவை, இந்துஸ்தான் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் பயிலும் மாணவி சுஹாசினிக்கு சிறந்த நாட்டு நலப்பணித் திட்ட 2021-22 ஆம் ஆண்டிற்கான தன்னார்வலர் விருது அண்ணா பல்கலைக் கழகம் சார்பாக வழங்கப்பட்டது. இந்த விருதினை விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார். இந்த சாதனையை இந்துஸ்தான் நாட்டு நலப்பணி திட்ட மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது முறையாக படைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் சார்பாக கல்லூரியின் அறங்காவலர் சரஸ்வதி கண்ணையன், துணை அறங்காவலர் பிரியா சதிஷ் ஆகியோர் மாணவி சுஹாசினிக்கு தங்களின் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனார். மேலும் இந்துஸ்தான் கல்வி குழுமத்தின் முதன்மை அதிகாரி கருணாகரன், கல்லூரி முதலவர் ஜெயா மற்றும் கல்லூரி நாட்டு நலப்பணித் திட்ட அதிகாரி பிரசன்ன வெங்கடேசன் ஆகியோர் வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை தெரிவித்துக் கொண்டனர்.