தானிஷ் அஹமது தொழில்நுட்ப கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம்

கோவை கா.கா.சாவடியில் அமைத்துள்ள தானிஷ் அஹமது தொழில் நுட்ப கல்லூரியில் சர்வதேச கருத்தரங்கம் சனிக்கிழமை கல்லூரியில் நடைபெற்றது.

இக்கருத்தரங்கிற்கு இணையத்தின் வாயிலாக மஸ்கட்டிலிருந்து மின்னியல் துறைத் தலைவர் ஜோனதன் மொன்டரியே கான்சினோ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசியதாவது, இன்றைய சூழலில் மாணவ மாணவியர்கள் புதிய தொழில் நுட்ப ஆராய்ச்சிகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு புதிய நவீன படைப்புகளை உருவாக்கி, அதனை உலகளாவிய சந்தைப்படுத்தல் வேண்டும் என்றார். பொறியாளர்கள் அதிக அளவில் தொழில் முனைவோராக மாற வேண்டும் என்றும் கூறினார். இந்நிகழ்ச்சியில் கல்லூரியின் நிர்வாக இயக்குனர் அக்பர் பாஷா மற்றும் தலைமை செயல் நிர்வாக அதிகாரி தமீஸ் அகமது ஆகியோர் தலைமை வகித்தனர். பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் பலர் கலந்துகொண்டனர்.