வேளாண் பல்கலையில் காலநிலை நடுநிலைமை குறித்த மாநாடு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் “Ecofest’23: ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை நடுநிலைமை” பற்றிய சர்வதேச மாநாடு நடைபெற்றது.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி, இம்மாநாட்டை தொடங்கி வைத்து, ஆற்றல் மாற்றம் மற்றும் காலநிலை நடுநிலைமையின் முக்கியத்துவம் குறித்து தனது கருத்துக்களை தெரிவித்தார்.

கோவை மாநகராட்சி ஆணையர் பிரதாப், தனது சிறப்புரையில் புவி வெப்பமயமாதலால் வேளாண்மையில் ஏற்படும் மாற்றங்கள் மூலம் அதன் உற்பத்தியில் உண்டாகும் பாதிப்புகள் குறித்து விளக்கினார்.

பல்வேறு துறைகளைச் சேர்ந்த விருந்தினர்கள் இம்மாநாட்டில் பங்கேற்றனர். இச்சர்வதேச மாநாட்டின் மலர்களை சிறப்பு விருந்தினர்களும், பல்கலைக்கழக துணைவேந்தரும் இணைந்து வெளியிட்டனர்.