‘7அப்’ பிராண்ட் தூதராக ராஷ்மிகா மந்தனா நியமனம்

7 அப், நடிகை ராஷ்மிகா மந்தனாவை தனது புதிய பிராண்ட் தூதராக அறிவித்துள்ளது. இந்த கூட்டாண்மை, ஒரு குதூகலமான மற்றும் மகிழ்ச்சியை உண்டாக்கத்தக்க வீடியோவின் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நியமனம் குறித்து பேசிய, பெப்சிகோ இந்தியா, எனர்ஜி ஹைட்ரேஷன் & ஃபிளேவர்ஸ் பிரிவின், முதுநிலை சந்தையாக்கல் இயக்குனர் நசீப்பூரி , ராஷ்மிகா தனது புத்துணர்ச்சியூட்டும் துடிப்பான குணாதிசியங்களின் மூலம் இந்தியாவின் மிகவும் விரும்பப்படும் நட்சத்திரங்களில் ஒருவராக மிகவேகமாக மாறிவிட்டார்.

உண்மையாகவே அவர் 7 அப்பிற்கு மிக சிறந்த பொருத்தமாவார். அவரது பரவலான புகழும் உறுதியான ரசிகர்கள் அடித்தளமும் பரந்துபட்ட நுகர்வோர் பிரிவில் எங்களது அடைதலை நிச்சயம் அதிகரிக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.

எங்களோடு இத்தகைய ஒரு புதிய புத்துணுர்ச்சியூட்டும் முகம் இணைந்துள்ளது குறித்து நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். இதன் மூலம் அற்புதமான பல விளம்பர படைப்பகளை உருவாக்கவுள்ளோம் என்று கூறினார்.