இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் வருடாந்திர கருத்தரங்கம் துவக்கம்

கோவையில் இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் வருடாந்திர கருத்தரங்கத்தை தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் துவக்கி வைத்தார்.

ஐஆக்ட்ஸ்க்கான் 2023 (IACTSCON) என்ற இந்த கருத்தரங்கம் கோவையில் மூன்று நாட்கள் நடைபெறுகிறது. நிகழ்வில் சிறப்பு விருந்தினராக எஸ்.என்.ஆர் அறக்கட்டளையின் இணை நிர்வாக அறங்காவலர் சுந்தர் கலந்து கொண்டார்.

இதில் உலகம் முழுவதும் இருந்து 1,200 க்கும் அதிகமான இதய அறுவை சிகிச்சை நிபுணர்கள், பேராசிரியர்கள் கலந்துகொள்கின்றனர். இதய அறுவை சிகிச்சையில் உள்ள புதுமைகளை எடுத்துரைக்கவும், இதய அறுவை சிகிச்சை குறித்த அனுபவங்களை பகிர்ந்துகொள்ளும் தளமாகவும் கருத்தரங்கு அமைக்கப்பட்டிருந்தது.

கருத்தரங்கின் முக்கிய உரையை உலக சுகாதார அமைப்பின் முன்னாள் தலைமை விஞ்ஞானி டாக்டர் சௌமியா சுவாமிநாதன் வழங்கினார். பெருந்தொற்றை நாம் கையாண்டதும், அதன் மூலம் கற்றுக்கொண்ட பாடங்களும் என்ற தலைப்பில் அவர் பேசினார்.

துவக்க விழாவிற்கு இந்திய இதய அறுவை சிகிச்சை சங்கத்தின் தலைவர் டாக்டர் மெஹர்வால், அதன் செயலர் டாக்டர் ஹிரேமத் தலைமை தாங்கினர்.