ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரியில் பள்ளிகளுக்கு இடையேயான கலைத்திறன் போட்டி

ஸ்ரீ ராமகிருஷ்ணா பாலிடெக்னிக் கல்லூரியில் மாநில அளவிலான பள்ளிகளுக்கு இடையான கிரியாபெஸ்ட் – 2023 என்ற தலைப்பில் பேச்சுபோட்டி, கட்டுரை போட்டி, ஓவியம், வினாடி- வினா, இசைக்கருவி வாசித்தல், குழு நடனம் மற்றும் மைம் ஷோ ஆகிய போட்டிகள் நடைபெற்றன.

இதில் பல்வேறு பகுதிகளில் இருந்து சுமார் 60 க்கும் மேற்பட்ட பள்ளிகளை சார்ந்த சுமார் 1200 மாணவ மாணவிகள் பங்கு பெற்றனர்

நிலவில் கல்லூரி முதல்வர் உமா தலைமையுரையாற்றினார். ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியின் முதல்வர் அலமேலு சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு போட்டிகளில் பங்கு பெற்ற மாணவ, மாணவியர்களை பாராட்டி பேசினார்.

சிறப்பு விருந்தினாராக துபாய், பன்னாட்டு நிறுவனத்தின் முதுநிலை தர மேலாளர் மற்றும் தன்னம்பிக்கை பேச்சாளர் ரவிசொக்கலிங்கம் கலந்துகொண்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு தொகை மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டி பேசினார்.

அவர் பேசும்போது, எந்த பள்ளியில் படிக்கிறோம் என்பது முக்கியமல்ல. தன்னம்பிக்கையுடன் தளராத முயற்சி, கடும் உழைப்பு, சாதிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவருக்கும் கண்டிப்பாக இருக்க வேண்டும். அதுவே உங்களை வெற்றி பாதைக்கு அழைத்து செல்லும். மேலும் கல்வி மட்டுமே நேர்மையாக உயர வேண்டும் என்ற எண்ணத்தை விதைக்கும் என பேசினார்.

அதனை தொடர்ந்து போட்டிகளில் முதல் மூன்று இடங்களில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுத்தொகையாக முறையே ரூபாய் 2000,1500 மற்றும் ரூபாய் 1000 உடன் கோப்பை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.