இந்துஸ்தான் கல்லூரியில் தொழுநோய் விழிப்புணர்வு

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஊனமுற்றோர் தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு துறையுடன் இணைந்து தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

இந்துஸ்தான் கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் நுண்ணுயிரியல் துறைத் தலைவர் லாலி கிறௌதர் வரவேற்றார். மருத்துவர் சிவகுமாரி, டி.டி.எல் மருத்துவ சேவைகள் துணை இயக்குனர் அன்பு தேவநேசன், டி.பி.எம்.ஆர் ஊனமுற்றோர் தடுப்பு மற்றும் மருத்துவ மறுவாழ்வு, மருத்துவம் அல்லாத மேற்பார்வையாளர் ரவிச்சந்திரன், சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி இதில் கலந்து கொண்டு தொழுநோய் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

தொழுநோய் ஒழிப்பு குறித்து மாணவர்களுக்கு பேச்சுப் போட்டி நடத்தப்பட்டது. இதில் 30 க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர். வெற்றி பெற்றவர்களுக்கு சான்றிதழ்கள் மற்றும் கேடயங்கள் வழங்கப்பட்டன.

நிகழ்ச்சிக்கு இந்துஸ்தான் கல்வி நிறுவனங்களின் அறங்காவலர் சரசுவதி கண்ணையன், நிர்வாக செயலாளர் பிரியா ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

தொழுநோய் பற்றிய உண்மைகள் மற்றும் தொழுநோயாளிகளுக்கான அரசின் திட்டங்கள் குறித்து மாணவர்கள் அறிந்து கொண்டனர்.