ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

ஸ்ரீ ராமகிருஷ்ணா மகளிர் கலை அறிவியல் கல்லூரியும், யாத்ராடெக் நிறுவனமும் இணைந்து புரிந்துணர்வு ஒப்பந்தமிட்டனர். இதில் எஸ்.என்.ஆர் சன்ஸ் அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் லட்சுமி நாராயணசாமி, யாத்ரா டெக் நிறுவனத்தின் துணைத்தலைவர் அசோக் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த ஒப்பந்தத்தின் மூலம் மாணவியரது ஆளுமை மேம்பாடு, எழுத்தாற்றல், தொழில் மேம்பாட்டிற்கான பயிற்சிகள் வழங்கப்படும். மாணவியருக்கு செய்முறை பயிற்சிகள் வழங்கப்படுவதால் மொழிவளம் பெறுவார்கள். இதனால் அவர்களுக்கு வேலை வாய்ப்புக்கான திறன்கள் அதிகரிக்கும் என்று கல்லூரி முதல்வர் சித்ரா குறிப்பிட்டார்.