வேளாண் பல்கலையில் காப்புரிமைக்கான பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் முதுகலை பட்டமேற்படிப்பு பயிலகம் சார்பில் காப்புரிமைக்கான பயிற்சி பட்டறை நடத்தப்பட்டது.

விவசாயத்தின் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக வணிக காப்புரிமைகள் பற்றிய இளம் கண்டுபிடிப்பாளர் ஆராய்ச்சியில் மறைந்திருக்கும் திறமைகள் மற்றும் கருத்துகளை ஆராய்வதில் பயிற்சி அளிக்கப்பட்டது.

பயிர் மேம்பாடு, மேலாண்மை, பயிர் பாதுகாப்பு மற்றும் பண்ணை இயந்திரமயமாக்கல் ஆகியவற்றை உள்ளடக்கிய துறைகளில் சுமார் 20 கண்டுபிடிப்புகள் புதுமையான காப்புரிமைகளை தாக்கல் செய்வதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த காப்புரிமை பட்டறையை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தொடங்கி வைத்தார்.

பெங்களூரு ஐபி காப்புரிமை வழக்கறிஞர் கிரிஜா கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். பட்டமேற்படிப்பு பயிலகத்தின் முதன்மையர் செந்தில் இப்பயிற்சியைப் பாராட்டி, பட்டறை குறித்து விளக்கினார்.