கோவை ரயில் நிலையத்தில் ‘எக்ஸ்பிரஸ் கார்கோ’ சேவை துவக்கம்

ரயில்வே மற்றும் தபால் துறை இணைந்து செயல்படுத்தும் ‘எக்ஸ்பிரஸ் கார்கோ’ சேவை திட்டம் தமிழகத்தில் முதன் முறையாக கோவை ரயில் நிலையத்தில் இன்று துவங்கியது. இந்த பார்சல் சேவை பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது.

கோவையில் ரயில்வே சேலம் கோட்ட, அசிஸ்டன்ட் கமர்சியல் மேனேஜர் பாண்டுரங்கா மற்றும் தபால் துறை, ரயில்வே துறையைச் சேர்ந்த அதிகாரிகள் இந்த சேவையை துவக்கி வைத்தனர்.

இந்த திட்டத்தின் மூலம் செல்லும் முதல் கார்கோ பார்சல்கள் இன்று மதியம் 3 மணி அளவில் கோவை ரயில் நிலையத்திலிருந்து புறப்பட்ட சதாப்தி ரயிலில் மூலம் எடுத்து செல்லப்பட்டது.

முதற்கட்டமாக 480 கிலோ எடை அளவிலான பார்சல்கள், கோவையிலிருந்து சென்னைக்கு ‘சதாப்தி எக்ஸ்பிரஸ்’ ரயிலில் அனுப்பப்பட்டன.

‘ஜாயிண்ட் பார்சல் ப்ராடக்ட்’ எனப்படும் இத்திட்டத்தில் பார்சல்கள் புக் செய்யும் இடத்திலிருந்து தபால் துறை மூலம் பெறப்பட்டு, ரயில்வே மூலம் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் தபால் துறையின் மூலம் உரிய இடத்திற்கு சென்று வழங்கப்படும்.