ஆலம் விழுதுகள் சார்பில் 350 மாணவிகளுக்கு இலவச நாப்கின்

தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு ஆலம் விழுதுகள் அறக்கட்டளையின் சார்பாக கோவை கவுண்டம்பாளையம், ராமசாமி நகரில் உள்ள மாநகராட்சி பள்ளி மாணவிகள்  350 பேருக்கு சானிட்டரி நாப்கின்கள் வழங்கப்பட்டது.

இதனுடன் நாப்கின் எரியூட்டி இயந்திரமும், பள்ளியின் சீரமைப்பு பணிகளுக்கு நன்கொடையும் வழங்கப்பட்டது. மேலும், ஆலம் விழுதுகளின் நிர்வாக இயக்குனர் மீனா ஜெயக்குமார் கலந்துகொண்டு பள்ளி மாணவிகளிடம் பாலியல் வன்கொடுமைகளை பற்றிய விழிப்புணர்வையும், பெண்கள் பாதுகாப்பு குறித்த விளக்கமும் அளித்தார்.