ராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரி பொங்கல் விழா 

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருந்தாக்கியல் கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. பொங்கல் பாரம்பரியத்தை போற்றும் வகையில் மாணவ மாணவிகளுக்கு இடையே பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

கிராம வாழ்வியல் சூழலை இன்றைய இளம் தலைமுறையினருக்கு கொண்டு செல்லும் வகையில் கிராமிய ஆடை அலங்கார போட்டிகள் நடத்தப்பட்டது.

இந்நிகழ்வுக்கு சிறப்பு விருந்தினராக ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் மருத்துவ இயக்குனர் மற்றும் டீன் சுகுமாரன் மற்றும் ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லுரியின் முதல்வர் மற்றும் செயலர் அலமேலு ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.