இந்தியாவில் சிறு விவசாயிகளை டிஜிட்டல் ரீதியாக மேம்படுத்திய மாஸ்டர் கார்டு

வளர்ந்து வரும் தீர்வான ‘ஃபார்ம்பாஸ்’ மூலம் இந்தியாவில் ஒரு மில்லியனுக்கும் அதிகமான சிறு விவசாயிகளுக்கு பயனளித்து, புதிய மைல்கல்லை எட்டியுள்ளதாக மாஸ்டர்கார்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

லாரன்ஸ்டேல் அக்ரோ புராஸசிங் இந்தியா (LEAF) மற்றும் BASIX சோஷியல் எண்டர்பிரைஸ் குரூப் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து செயல்பட்ட கட்டண தொழில்நுட்ப நிறுவனமான மாஸ்டர்கார்டு, தற்போது 2025-ஆம் ஆண்டின் இறுதிக்குள் 10 மில்லியன் விவசாயிகளுக்கு சேவைகளை அளிக்க வேண்டும் என்கிற இலக்கை நிர்ணயம் செய்துள்ளது.

இது பற்றிப் பேசிய மாஸ்டர்கார்டு நிறுவனத்தின், ஹமானிடேரியன்& டெவலப்மென்ட் பிரிவின் எக்சிக்யூட்டிவ் வைஸ் பிரசிடென்ட், தாரா நாதன் கூறுகையில், “ஃபார்ம் பாஸ்-ஐ உள்ளடக்கிய கம்யூனிட்டிபாஸ் என்பது சிறு விவசாயிகளுக்கான கட்டணத்தை அதிகமாகவும்,விரைவாகவும் பெற வடிவமைக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு இந்தியாவில் ஒரு மில்லியன் விவசாயிகளுக்கு உதவியதில் மாஸ்டர்கார்டு பெருமை கொள்கிறது.

இந்திய அரசின் இலக்கிற்கு ஏற்ப நிதி ரீதியாக அனைவரையும் உட்படுத்துவது மற்றும் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கி, நம்பகமான சந்தைகள் மற்றும் நிதிச்சேவைகளையும் சிறுவிவசாயிகள் அணுக முயற்சிக்கும் போது அவர்கள் எதிர்கொள்ளும் தடைகளை இந்த கம்யூனிட்டிபாஸ் நிவர்த்தி செய்கிறது,” என்று அவர் கூறினார்.

LEAF நிறுவனத்தின் நிறுவனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, பலட் விஜயராகவன் இது குறித்து பேசுகையில், “விவசாயத்தொழில்நுட்பத்தில் எங்களுக்குள்ள ஆழமான நிபுணத்துவத்தைப்பயன்படுத்தி, மாஸ்டர்கார்டு உடனான இந்த கூட்டணியானது பல டிஜிட்டல் தயாரிப்புகள் மற்றும் தீர்வுகளை உருவாக்குவதில் உதவி, சிறு விவசாயிகளின் வாழ்க்கையை சிறப்பாக மாற்றியுள்ளது. விரிவான பயிற்சி மற்றும் திறன் மேம்பாட்டு திட்டங்கள் மூலம், விவசாயிகளுக்கு மேலும் அதிகாரம் வழங்கி, அதிக மீளும் திறன் உள்ளவர்களாக்கும் பணிகளைத் தொடர்ந்து மேற்கொள்வோம்,” என்று தெரிவித்தார்.

இது பற்றி பேசிய BASIX நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி, D சட்டய்யா, “இந்திய விவசாயிகளை மேம்படுத்தும் எங்கள் முயற்சியில் மாஸ்டர்கார்டு நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவது குறித்து நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். BASIX- இன்ஃபார்மர்ஸ் மார்க்கெட் அதன் விவசாயப் பரிவர்த்தனைகளில் முழுமையான வெளிப்படைத்தன்மையை உறுதி செய்வதற்கும் ,விவசாயிகளுக்கு அதிக விலை கிடைக்கச்செய்வதற்கும் மாஸ்டர்கார்டின் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது,” என்று கூறினார்.