தமிழ்நாடு வேளாண் பல்கலையில் வேலைவாய்ப்பு முகாம்

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் இளநிலை இறுதியாண்டில் பயிலும் அனைத்துப் பட்டப்படிப்பு மாணவர்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இதில் பல்கலைக்கழகத்தின் கீழ் தமிழகம் முழுவதும் உள்ள 14 உறுப்பு கல்லூரிகளிலிருந்து 1196 மாணவர்கள் கலந்து கொண்டனர். சிறப்பு விருந்தினராகக் இந்திய வேளாண்மை ஆராய்ச்சியின் இணைப் பொது இயக்குநர் (கல்வி) அகர்வால், கலந்துகொண்டார்.

பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் கீதாலட்சுமி தலைமையுரை நிகழ்த்தி கூறுகையில்: தமிழகம் முழுவதும் உள்ள வேளாண்மைக் கல்லூரி மாணவர்கள் அனைவரும் பயன்பெறும் வகையில் இந்த வேலைவாய்ப்பு முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது திறனை வெளிப்படுத்தி வேலைவாய்ப்பை உறுதி செய்து கொள்ளுமாறு குறிப்பிட்டார்.