கே.ஜி கல்லூரியில் வர்ணபந்தம்’ எனும் ஓவிய கண்காட்சி

கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் காட்சி தொடர்பியல் துறை, ‘வர்ணபந்தம்’ எனும் தேசிய கலை விழா மூன்று நாட்கள் நடைபெற்றது.

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்திருந்த 50 க்கும் மேற்பட்ட கலைஞர்கள் தங்களது ஓவியங்களையும் கலை படைப்புகளையும் கே.ஜி.ஐ.எஸ்.எல் கல்லூரி வளாகத்தில் காட்சிப்படுத்தினர்.

இதில் கலைஞர்களுக்கு விருது வழங்கும் விழாவும், ஓவிய கண்காட்சியும் நடந்தது. சுமார் 2500 க்கும் மேற்பட்ட மாணவர்களும், பொது மக்களும் ஓவிய கண்காட்சியை கண்டு ரசித்தனர்.

கே.ஜி கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் செயலாளர் வனிதா, கல்லூரி முதல்வர் ரத்தினமாலா, கல்லூரியின் கலை இயக்குனர் மற்றும் காட்சி தொடர்பில் துறை தலைவர் சார்லஸ் முன்னிலையில் விருது வழங்கும் விழா நடைபெற்றது.