பாரத மாதா அறக்கட்டளை சார்பில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்

கோவை உடையாம்பாளையம் பாரத மாதா நற்பணி அறக்கட்டளையின் சார்பில் மதநல்லிணக்க கிறிஸ்துமஸ் விழா செட்டிபாளையம் பகுதியில் உள்ள சத்தியஜிவன் கருணை இல்லத்தில் உள்ள பெண் குழந்தைகளுடன் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் உடையாம்பாளையம் மாரியம்மன் கோயில் திருவிழா மற்றும் நவராத்திரி விழாக்களில் அம்மனுக்கு சீர்வரிசையாக வைத்து வழிபட்ட பெண் பிள்ளைகளின் ஆடை, அணிகலன்கள் உள்ளிட்ட மகளிர் ஆபரண அணிகலன்கள் வழங்கியதுடன், உணவு, அரிசி, மளிகைப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் வழங்கி கொண்டாடப்பட்டது.

இந்நிகழ்வில் நிர்வாகிகள் கெளரி சங்கர், ராஜா, ராஜ், சுரேஷ், ராம், நிகிலேஷ், வசந்த், விக்னேஷ் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.