சாக்லேட் விற்பனை அதிகரிக்க காரணம்

இந்த ஆண்டு Cadbury சாக்லேட்களின் விற்பனை மட்டும் 1 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது என்று அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இனிப்புகளை யாருக்குத்தான் பிடிக்காது, அதிலும் சாக்லேட்களை.. `நல்ல விஷயம் செய்றதுக்கு முன்னாடி ஸ்வீட் சாப்பிடணும், ஒண்ணும் செய்யாமல் இருந்தாலும் ஸ்வீட் சாப்பிட வேண்டும்’ என்று  சாக்லேட் சாப்பிடுவதற்கான நேரங்களை உடைத்து, எப்போது வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்கிற  விளம்பரங்கள் வெளியானது.

மக்கள் தங்களின் மனவழுத்தத்தின் போதும், பணவீக்கத்தின் மத்தியிலும் அதிக சாக்லேட்களை சாப்பிட்டுள்ளனர் என்கிறது Mondelez India.

இந்திய நாட்டின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிப்பு நிறுவனம் தான், மன்டிலேஸ் இந்தியா (Mondelez India).  இது 5 ஸ்டார், கேட்பரி, போர்ன்விடா,டெய்ரி மில்க், சாக்கோபேக்ஸ், நட்டிஸ், ஜெம்ஸ், ஹால்ஸ், ஓரியோ, டாங் போன்ற பல பிராண்ட் தயாரிப்புகளை விற்பனை செய்து வருகிறது.

இந்த நிலையில்  சாக்லேட் விற்பனையில் வலுவான வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் சுமார் 1.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் வரை வருவாய் ஈட்டியுள்ளது. இந்த ஆண்டு Cadbury சாக்லேட்களின் விற்பனை மட்டும் 1 பில்லியன் டாலரைக் கடந்துள்ளது என்று அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

ஓரியோ மற்றும் போர்ன் விடாவின் விற்பனையில் புதுமையான சாக்லேட்களை அறிமுகம் செய்து, அதைப் பல இடங்களுக்கும் கொண்டு  சேர்த்ததன் விளைவாகக் இதனை அடைய முடிந்தது.