“5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கோவிலை காணவில்லை”

– கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

அகில இந்திய மள்ளர் எழுச்சி பேரைவையினர் 5 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலை காணவில்லை என கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று (12.12.2022) மனு ஒன்றை அளித்தனர்.

அந்த மனுவில் திருச்சி குணசீலம் கிராமத்தில் 5 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் ஞானவர்மன் என்கிற சோழ மன்னரால் கட்டப்பட்ட பழமையான கற்கோவிலையும் – இந்திரன் சிலை உட்பட்ட பிரதான சின்னங்கள் அழிக்கப்பட்டு அந்த இடத்தில் இருந்த பிரசன்ன வெங்கடாஜலபதி திருக்கோவில் மற்றும் தேவேந்திரன் சிலை மாயமாகியுள்ளது.

மேலும் அந்த இடத்தில் இருந்த கோவில்கள் முழுமையாக இடிக்கப்பட்டு, கோவையை சேர்ந்த தனியார் ஜூவல்லரி உரிமையாளரும், கோவிலின் அறங்காவலரும் கோவிலில் விதிகளை மீறி நடந்துள்ளனர்.

முன்னதாக இருந்த சிலைகள், தேவேந்திரப் பெருமான் குறித்த அடையாளங்கள் உள்ளிட்டவையினை கண்டுபிடித்து தருமாறும், இவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் மனுவில் குறிப்பிட்டிருந்தது.