வேளாண் பல்கலையில் வணிகம், சந்தை குறித்த பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலையில் ‘வேளாண்மை வணிகம், சந்தை நுண்ணறிவு மற்றும் உற்பத்திச் சங்கிலி’ என்ற தலைப்பில் குறுகிய கால பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி டிசம்பர் 9 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

இதில் கர்நாடகா, மகாராஷ்டிரா, பாண்டிச்சேரி, உத்தரபிரதேசம், தமிழ்நாடு மாநில வேளாண் பல்கலைக்கழகங்கள், கால்நடை மருத்துவப்பல்கலைக் கழகங்கள் மற்றும் இணைக் கல்லூரிகளைச் சேர்ந்த சுமார் 19 பேர் பங்கேற்றனர்.

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் மற்றும் அமிர்தா பல்கலைக்கழக பேராசிரியர்கள், பார்ம் அகைன் இந்தியா பிரைவேட் லிமிடெட், எஸ்.கே.எஸ். ஸ்கில் பாஸ்ட்டெனெர்ஸ், மிஸ்ட் சொலுஷன்ஸ் போன்ற தொழில் நிறுவனங்களில் இருந்து பாட நிபுணர்களாக சுமார் 35 பேர் பயிற்சியளிக்கின்றனர்.

இப்பயிற்சியின் தொடக்க விழாவில் வேளாண்மை மற்றும் ஊரக வளர்ச்சி ஆய்வுமைய இயக்குனர் சுரேஷ்குமார், முதல்வர் (வேளாண்மை) வெங்கடேச பழனிச்சாமி ஆகியோர் விவசாயிகள் மற்றும் அதன் பங்குதாரர்கள் புதிய அணுகுமுறைகளைப் பற்றி சிந்திக்க வேண்டிய கட்டாயத்தில் இருப்பதால், இந்த பயிற்சி அவசியம் என்றனர்.

துணைவேந்தர் கீதாலட்சுமி தனது உரையில், விவசாயத்தை வேளாண் வணிகமாக மாற்ற வேண்டியதன் அவசியத்தையும் உற்பத்திச் சங்கிலி தொழில் நுட்பத்தின் மூலம் தயாரிப்புகளை கண்டு பிடிப்பதன் முக்கியத்துவம், உற்பத்தியாளர்கள் மற்றும் நுகர்வோர் அவர்கள் விற்கும் மற்றும் வாங்கும் தயாரிப்புகள் பற்றிய நுண்ணறிவுகளைப் பெற உதவும் என்றும் கூறினார்.