என்.ஜி.பி கல்லூரியில் அறிவியல் கழகத் துவக்க விழா

டாக்டர்.என்.ஜி.பி. கல்வியியல் கல்லூரியில் மாணவர்களின் அறிவியல் ஆர்வத்தை ஊக்குவிக்கவும், அறிவியல் செயல்பாடுகளில் அவர்களின் தேடலை நிறைவேற்றவும் துணையாக அமையும் அறிவியல் கழகத் தொடக்க விழா நடைபெற்றது.

முதல்வர் ராமசாமி தலைமையுரையாற்றினார். பின்னர் கல்லூரியின் வேதியியல் துறைத் தலைவர் சுகந்தி, தொடக்கவிழா சிறப்புரையாற்றினார். அறிவியல் கழகத்தின் நோக்கங்கள், பண்புகள் மற்றும் பொறுப்புகள் குறித்த செய்திகளைத் தமது உரையில் விளக்கினார்.

மேலும் அறிவியல் மனப்பான்மை, விமர்சன சிந்தனை மற்றும் பிரச்சனைகளை தீர்க்கும் திறன் ஆகியவற்றை இளம் மனங்களில் வளர்ப்பதில் இவரது பேச்சு கவனம் செலுத்தியது குறிப்பிடத்தக்கது.

இவ்விழாவில் அறிவியல் கழகத்தால் தயாரிக்கப்பட்ட “ஆக்கப்பூர்வமான அறிவியல் கல்விக்கான கவர்ச்சிகரமான தொழில்நுட்பம்” என்ற சிறு புத்தகம் வெளியிடப்பட்டது.

மேலும், அறிவியல் கருப்பொருள்கள் சார்ந்த நாடகம், பேச்சு, காணொளி வழங்கல் போன்ற நிகழ்ச்சிகள் மாணவர்களால் நடத்தப்பெற்றது.