புரோசோன் மாலில் நடிகர் புகழ் பங்குபெற்ற கலை நிகழ்ச்சி

கோவை, புரோசோன் மாலில் வரும் டிசம்பர் 4-ம் தேதி வரை பிளாக் பிரைடே விற்பனை நடைபெற்று வருகின்றது. புரோசோன் மாலில் உள்ள 100 க்கும் மேற்பட்ட முக்கிய பிராண்டகங்களில் 50 சதவீதம் தள்ளுபடி தர உள்ளார்கள்.

மேலும் இங்கு நடைபெறும் கலை நிகழ்ச்சிகளில் புகழ்பெற்ற இசைக்கலைஞர் சாம் விஷால் லைவ் பேண்ட் காம்பெடிஷன் நிகழ்ச்சியும், பிரபல பேஷன் ஷோ கலைஞர் சுருதிஹாவின் பேஷன் ஷோ நிகழ்ச்சியும், பிரபல திரைப்படம் மற்றும் சின்னத்திரை நடிகர் புகழ் பங்குபெறும் டான்ஸ் போட்டி மற்றும் காமெடி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட நடிகர் புகழ் ரசிகர்களுடன் செல்பி எடுத்துக்கொண்டார்.

புரோசோன் மாலுக்கு கலை நிகழ்ச்சியை காணவும் தள்ளுபடியில் பொருட்களை வாங்கவும் கூட்டம் அலைமோதுகிவது குறிப்பிடத்தக்கது.