மத்திய அரசு நிறுவனத்தில் உதவித்தொகையுடன் தொழிற்பயிற்சி!

மத்திய அரசு கட்டிடத் துறை நிறுவனத்தில் கலை மற்றும் அறிவியல் படித்த மாணவர்களுக்குத் தொழிற்பயிற்சி அறிவிப்பு வெளியாகியுள்ளது.

மத்திய அரசின் கட்டிடத் துறை நிறுவனமான என்.பி.சி.சி நிறுவனத்தில் கலை மற்றும் அறிவியல் படித்தவருக்கு ஒரு வருடத் தொழிற்பயிற்சிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. பட்டப்படிப்பு படித்தவர்கள் தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்கலாம்.

தொழிற்பயிற்சிக்கு விண்ணப்பிக்க 18 இல் இருந்து 30 வயது வரை இருக்க வேண்டும். SC/ST பிரிவினருக்கு 3 வருடம் மற்றும் OBC பிரிவினருக்கு 5 வருடம் வயது சலுகை உண்டு.

கல்வித்தகுதி – BBA/B.Sc/B.A/B.Com

பணியிடம்- 10

உதவித்தொகை – 14,000

தேர்வு செய்யப்படும் முறை:

கல்வித்தகுதி மற்றும் மதிப்பெண் அடிப்படையில் தகுதியானவர்கள் தொழிற்பயிற்சிக்குத் தேர்ந்தெடுக்கப்படுவர்.

குறிப்பு:

2019, 2020, 2021 மற்றும் 2022 ஆம் ஆண்டுகள் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் முறை:

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து முறையான சான்றிதழ்களுடன் இணைத்து மின்னஞ்சல் முகவரிக்குக் கொடுக்க வேண்டும்.

விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: training@nbccindia.com

விண்ணப்பத்தைப் பதிவிறக்கச் செய்ய: http://portal.mhrdnats.gov.in/

விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள்: 03.12.2022.