என்.ஜி.பி கல்லூரியில் பெற்றோர் ஆசிரியர் அமைப்புக் கூட்டம்

டாக்டர் என்.ஜி.பி. கலை மற்றும் அறிவியல் கல்லூரியின் பெற்றோர் ஆசிரியர் கழகத்தின் சார்பாக, பெற்றோர் – ஆசிரியர் அமைப்புக் கூட்டம் நடைபெற்றது.

பல்வேறு துறைகளைச் சார்ந்த மாணவ, மாணவியர்களின் பெற்றோர்கள் சுமார் 300 க்கும் மேற்பட்டோர் இதில் கலந்துகொண்டனர்.

பெற்றோர்களுக்கு, மாணவர்களின் நிலை மற்றும் பெற்றோர்களின் பங்கு குறித்த கருத்துக்களைப் பெற்றோர்கள் அறிந்து கொள்ளும் வகையில் காணொலிக் காட்சி வழங்கப்பட்டது. இந்நிகழ்வில் மாணவர்களின் ஒழுக்கம், முன்னேற்றத்திற்கான நடவடிக்கைகள், கல்லூரி வளர்ச்சிக்கான கருத்துக்கள், மற்றும் வேலைவாய்ப்பு சார்ந்த தகவல்கள் போன்றவை குறித்து பெற்றோர்கள் தங்களது ஆலோசனைகளை கூட்டத்தில் வழங்கினர்.

கல்லூரியின் முதல்வர் பேராசிரியர் ராஜேந்திரன் பெற்றோர் – ஆசிரியர் அமைப்புக் கூட்டம் குறித்தும், அதன் செயல்பாடுகள் மற்றும் வருகின்ற ஆண்டுகளில் கல்லூரியின் வளர்ச்சிகளில் பெற்றோர் – ஆசிரியர் அமைப்பின் நிலைப்பாடுகள், அதன் பங்களிப்புகள் குறித்தும் பேசினார்.