கே.ஐ.டி கல்லூரி கபடி போட்டியில் வெற்றி

கோவை கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) அண்ணா பல்கலைக்கழகத்தின் 9 வது மண்டல கல்லூரிகளுக்கிடையே ஆண்களுக்கான கபடி போட்டி நடைபெற்றது.

12 கல்லூரிகள் பங்கேற்ற இப்போட்டிகளை கல்லூரியின் முதல்வர் மோகன்தாஸ் காந்தி தலைமையேற்று தேசியக் கொடியினை ஏற்றி போட்டிகளைத் துவக்கி வைத்தார்.

ஸ்ரீ சக்தி பொறியியல் மற்றும் தொழில் நுட்ப கல்லூரி மற்றும் கே.ஐ.டி கல்லூரிகளுக்கிடையே நடைபெற்ற இறுதி போட்டியில் (25-40) என்ற புள்ளிக்கணக்கில் கே.ஐ.டி கல்லூரி அணி வென்றது.

கல்லூரியின் நிறுவனத்தலைவர் பொங்கலூர்.நா.பழனிச்சாமி, கல்லூரித்துணைத் தலைவர் இந்துமுருகேசன், கல்லூரி துணை முதல்வர் ரமேஷ், கல்லூரியின் உடற்கல்வி இயக்குனர்கள் ஜெயபிரகாஷ், ஜெகநாதன், தினேஷ் ஆகியோர் பரிசளிப்பு விழாவில் பங்கேற்று வீரர்களை வாழ்த்தினர்.