தமிழகத்தில் எந்த இடத்திலும் மின்விநியோக பாதிப்பு இல்லை

– அமைச்சர் செந்தில் பாலாஜி

கோவை மாநகர பகுதியில் தேங்கியுள்ள மழைநீரை உறிஞ்சும் பணியினை
அமைச்சர் செந்தில் பாலாஜி பார்வையிட்டார்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி,
மழையில் பாதிப்பு வரகூடாது என்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. கோவையில் கடந்த ஆண்டு நீர் தேங்கியது.

கடந்த ஆண்டில் பாதிப்பை ஆய்வு செய்து இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டது. 32 வாய்கால் பணிகள் முடிக்கப்பட்டுள்ளது. மழைநீர் தேங்கும் பகுதி ஆய்வால் பாதிப்புகள் ஏற்படாதபடி தவிர்க்கப்பட்டுள்ளது.

தமிழகம் முழுவதும் சீரான மின் விநியோகம் வழங்கப்படுகிறது. ஆட்சியர் தலைமையில் செயல்பாடுகள் உள்ளது. கோவை மாநகராட்சி பகுதியில் மழைநீர் தேங்காதபடி பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அதிக மழையிலும் பாதிப்பு இல்லை. மோட்டார்கள் தயாராக உள்ளது. அதிக மழை பெய்தாலும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பாதிக்கப்படும் இடங்களை மாவட்ட ஆட்சியர், மாநகராட்சி ஆணையாளர் ஆகியோர் பார்வையிடுகின்றனர்.

தமிழகம் முழுவதும் எந்த இடங்களிலும் மின்விநியோகம் பாதிப்பு இல்லை. 11,000 பேர் மின்வாரியத்தின் மூலம் சிறப்பு பணிகளை மேற்கொள்ள பணியமர்த்தப்பட்டுள்ளனர்.

மின்வாரியம் மற்றும் குழுக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளது. தமிழக முதல்வரின் சிறந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை தான் இதற்கு காரணம். கோவையில் வரலாற்றில் இல்லாத மழை பெய்தும் பாதிப்பில்லை.

பத்தாண்டுகள் மின் திட்டங்கள் செயல்படுத்தவில்லை. சிறு குறு தொழில் நடத்த இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக குறைந்த மின்கட்டணம்.

மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த ஐந்து ஆண்டில் எந்தவிதமான சாலையும் போடவில்லை. சிறப்பு நிதி 200 கோடியில் 26 கோடி விடுவிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்குள் பழுதடைந்த சாலைகள் சரி செய்யப்படும் என்றார்.