5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு

– அமைச்சர் சி.வி கணேசன்

கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற உள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முதல்நிலை கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையிலும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் தலைமையிலும் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அமைச்சர் கணேசன் பேசியதாவது: ஒரு லட்சத்து ஏழாயிரம் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுத் தந்துள்ளோம். வரும் 27 ம் தேதி பொள்ளாச்சியில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.

தமிழ்நாட்டில் வேலை இல்லை என்ற போக்கை மாற்ற தமிழக முதல்வரால் இந்த திட்டம் நடைபெற்று வருகிறது. 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவோம்.

இந்திய அளவில் கல்வி துறையில் 51% முதன்மை மாநிலமாக உள்ளது. 2800 கோடி தொழில் பயிற்சி மையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்றார்.