ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் ராமாயணம் நாடக நடனம்

ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் சார்பில் தேசிகா தயா குழுவினரின் ராமாயணம் நாடக நடனம் கோவை கிக்கானி மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இந்நடன நிகழ்வு ஷோபனா பாலசந்திரா தலைமையில் நடந்தது. மகாகவி பாரதியாரின் கொள்ளுப் பேரனான ராஜ்குமார் பாரதி நடனத்திற்க்கான இசையமைத்தார்.

மேலும் ராமாயணம் நாடக நடனத்திற்க்கான எழுத்து மற்றும் கருத்துருவை தஸ்யந்த் ஸ்ரீதர் உருவாக்கினார்.