சொடக்கு தக்காளியின் சத்துக்கள்

சொடக்கு தக்காளியில் விட்டமின் பி1,பி2, பி3, விட்டமின் ஏ,விட்டமின் சி, இரும்புச் சத்து பாஸ்பரஸ்,பொட்டாசியம், புரோட்டீன், கார்போஹைட்ரேட் போன்ற எண்ணற்ற சத்துகள் இதில் அடங்கியுள்ளது.

பயன்கள்!

சொடக்கு தக்காளியின் செடியின் இலையையும் காயையும் சிறிதளவு எடுத்து நன்றாக நசுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து,பின்பு இந்த நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை சேர்த்து வடிகட்டி தினமும் குடித்து வந்தால் உடலில் உள்ள பல பிரச்சினைகளை குணமாகும்

  1. இந்த நீரை தினமும் குடித்து வருவதனால் எப்பேர்ப்பட்ட மூட்டுவலியும், விரைவில் குணமாகும். குறிப்பாக வயதானவர்களுக்கு ஏற்படும் மூட்டு வலிக்கு எந்த  மருந்து போட்டாலும் அது கேட்காது. ஆனால் இந்த சொடக்கு தக்காளி நீரை குடித்து வந்தால் அவர்களின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு மூட்டு வலி பிரச்சனைகளில் இருந்து தீர்வு கிடைக்கும்.
  2. இதில் விட்டமின் பி1 அதிகளவில் இருப்பதனால் தினமும் காலையில் குடித்து வருகையில் இதயத்தில் தேங்கிருக்கும் தேவையற்ற கொழுப்புகளை கரைக்கும் சக்தி இதற்கு உள்ளது. மேலும் கீழ் வாத பிரச்சினையை குணப்படுத்துவதிலும் முக்கிய பங்கேற்கிறது .
  3. இந்த நீரை புற்றுநோய் உள்ளவர்கள் தொடர்ந்து குடித்து வந்தால் புற்று நோயினால் ஏற்படக் கூடிய பெரிய அளவிலான பாதிப்புகளை குறைக்க வல்லது.மேலும் அந்த புற்றுநோய் கட்டியால் ஏற்படும் வலிகளையும் குறைக்க இந்த சொடக்கு தக்காளி நீரானது பயன்படுகின்றது என்பது மருத்துவர்களின் கூற்றாகும்.
  4. இந்த சொடக்கு தக்காளியில் விட்டமின் பி3 அதிகமாக இருப்பதினால்,உடலில் புதிய ரத்தம் ஊறுவதற்கு வழி செய்யும்.
  5. இந்த சொடக்கு தக்காளி பழத்தை தினமும் காலையில் ஐந்து அல்லது பத்து பழம் சாப்பிட்டு வருகையில் சிறுநீர் மற்றும் கல்லீரலில் ஏற்படும் பைரோசிஸ் எனப்படும் கிருமி தொற்றுகளைத் சரிச்செய்யும்.
  6. அதுமட்டுமல்லாமல் இந்த சொடக்கு தக்காளி பழத்தை நாம் தினமும் சாப்பிட்டு வந்தால்,நம் உடலில் நினைவாற்றல் அதிகரிக்கும்.இது மட்டுமின்றி ஜீரணக் கோளாறுகளை சரி செய்யும் சக்தியும் இந்த சொடக்கு தக்காளி பழத்திற்கு உண்டு.
  7. நம் உடலில் ஏற்படும் கட்டிகளை கரைக்க இந்த சொடக்கு தக்காளி இலை மற்றும் கனிகளை மஞ்சளுடன் சேர்த்து அரைத்துக் கட்டிகளின் மீது பூசி வந்தால் கட்டிகள் சுலபமாக கரைந்துவிடும். கட்டினால் ஏற்படும் வலிகளும் முற்றிலும் நீங்கிவிடும். இந்த சொடக்கு தக்காளியை பாக்கெட் செய்து சில நாடுகளில் கிலோ 5000 ரூபாய் வரைக்கும்,சில நாடுகளில் 30000 ரூபாய் வரைக்கும் விற்பனை செய்கின்றனர். நாம் அதனை குப்பை செடியாக பார்த்து வருகின்றோம் என்பதே உண்மை