கே.ஐ.டி கல்லூரியில் புரிந்துணர்வு ஒப்பந்தம்

கலைஞர் கருணாநிதி தொழில்நுட்பக் கல்லூரியில் (கே.ஐ.டி) கணினி அறிவியல், வணிக அமைப்புகள் மற்றும் வேலைவாய்ப்பு பயிற்சி மையம், இன்னோவேலி ஒர்க்ஸ் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த நிகழ்விற்கு சிறப்பு விருந்தினராக இன்னோவேலி ஒர்க்ஸ் நிறுவனத்தின் நிறுவனர் திலீபன் தங்கவேல் கலந்துகொண்டார். மேலும், கல்லூரி முதல்வர் மோகன்தாஸ் காந்தி, துணை முதல்வர் ரமேஷ், வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி மையத்தின் டீன் மகாலட்சுமி, ஒருங்கிணைப்பாளர் கீர்த்திகா, பேராசிரியர்கள், துறைத்தலைவர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.